தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஆண்டு
மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள்
நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும்
அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்
தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது.
இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு
துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது. இந்த விபரங்களை அனைத்து
மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த
விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக