பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை, சி.டி.,களில் பதிவுசெய்து, அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, வீடியோ, ஆடியோ கட்சி பதிவுகளை கல்வித்துறை கோரி உள்ளது.
இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எந்த காலத்திலும் பயன்படுத்தும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.
தனிமனிதன், நிறுவனம், சாதி, மதம் சார்ந்ததாக இருக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை ஜன., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை, சி.டி.,களில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக