மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், நேற்று நடந்தது.
இதில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக