இதுவரை தொடக்கக்கல்வி இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களின் TPF & CPS விவரங்கள் அனைத்தும் கிண்டி அண்ணா நூலகம் அருகே உள்ள Data Center லும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்த
ஆசிரியர்களின் GPF & CPS விவரங்கள் அனைத்தும் சென்னை,அண்ணா சாலையில் உள்ள மாநில தலைமை கணக்காயர் அலுவலகத்திலும் (AG Office ) சேகரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் 01.01.2014 முதல் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் CPS விவரங்களும் Data Center லேயே பதிவு செய்யப்படும். இதனால் அவர்களுக்கு கூடிய விரைவில் Data Centerமூலமாக புதிய CPS எண் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் GPF விவரம் தொடர்ந்து AG Office லேயே பதிவு செய்யப்படும். AG Office மூலமாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு CPS வருடாந்திர Schedule அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் Data Center மூலமாக இது போன்ற Scheduleமுழுமையாகவும், முறையாகவும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படாததால் புதிதாக இந்த அலுவலகத்தின் கீழ் வரக்கூடிய பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக