லேபிள்கள்

4.1.14

அடிப்படைக்கல்வி தரமறிய மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு: எஸ்.எஸ்.ஏ.,ஏற்பாடு

அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்,ஆங்கிலம்,கணித பாடங்களின் வாசிப்புத்திறன்,அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்..,) சார்பில்,அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்விற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு 3,5,8ம் வகுப்பில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த 30 மாணவ,மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களிடமிருந்து ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வி தரத்தை பரிசோதிக்கும் விதமாக தமிழ், ஆங்கில பாடத்தில் வாசிப்பு, அடிப்படை கணிதத்தை அறிய அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வை நடத்தி சர்வே எடுக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலுமிருந்து 20 தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு தேர்வு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 3, 5ம் வகுப்பிற்கான தேர்வு ஜன.21,22லும், 8 ம் வகுப்பிற்கு 23,24ந்தேதியிலும் நடக்கிறது என, அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுனர்கள் தெரிவிக்கின்றனர்.



அதிகாரி ஒருவர் கூறுகையில், "இத்தேர்விற்கான வினாக்கள் அறிவியல் பரிசோதனை அடிப்படையில் ஆய்வு நோக்கில் அமைந்திருக்கும்.யாரும் காப்பி அடிக்க முடியாது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித்தரம், திறனை அறிய முடியும் என, நம்பப்படுகிறது.இதில், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஆன்- லைனில் ஏற்றப்படும். இதன் மூலம், மத்திய அரசிட மிருந்து எஸ்.எஸ்..,விற்கு கூடுதல் நிதியை பெறவும் வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக