ஓய்வூதியம் பெறுபவர், அவர் மனைவி, குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ உதவி செய்வதற்காக, 1995ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சுகாதார நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியிலிருந்து, சிறப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும், ஓய்வூதியதாரர்களுக்கு, மருத்துவ செலவில், 75 சதவீதம், 1 லட்சம் ரூபாய், ஆகியவற்றில், எது குறைவோ, அது வழங்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என, சட்டசபையில், நிதித்துறை அமைச்சர் அறிவித்தார். தற்போது, ஓய்வூதியம் பெறுவோருக்கும், அவர்களின் மனைவிக்கும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சைக்கு வழங்கப்படும் தொகை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும், ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், ஒருவர் மட்டும், பிரீமியத் தொகை செலுத்தினால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக