லேபிள்கள்

10.2.15

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 31 வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10 வரையிலும் நடைபெறுகின்றன. இப்போது பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வுக்கான பல்வேறு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தேர்வுகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் அளவிலான அதிகாரிகளுக்கு மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

  • அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் - சென்னை


  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் க.அறிவொளி - காஞ்சிபுரம்


  • தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் - திருவள்ளூர்


  • மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை - வேலூர்


  • மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் - விழுப்புரம்


  • பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் - திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்


  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) எஸ்.கார்மேகம் - நாகப்பட்டினம், திருவாரூர்


  • ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் டி.உமா - தருமபுரி, கிருஷ்ணகிரி


  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை) எம்.பழனிச்சாமி - சேலம், நாமக்கல்


  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர்) அ.கருப்பசாமி - கோவை, நீலகிரி


  • தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர்) என்.லதா - பெரம்பலூர், அரியலூர்


  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) சி.உஷாராணி - மதுரை


  • மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி நிறுவன இணை இயக்குநர் வி.பாலமுருகன் - தேனி


  • அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) - ஈரோடு, திருப்பூர்


  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர் பி.ஏ. நரேஷ் - திருநெல்வேலி, கன்னியாகுமரி


  • அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் இணை இயக்குநர் கே.சசிகலா - விருதுநகர்


  • தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) சி.செல்வராஜ் - திண்டுக்கல்


  • அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இணை இயக்குநர் பி.குப்புசாமி - சிவகங்கை


  • பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் சுகன்யா - ராமநாதபுரம், தூத்துக்குடி


  • அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இணை இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன் - கரூர்


  • மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி - திருவண்ணாமலை


  • மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணை இயக்குநர் சி.அமுதவல்லி - கடலூர.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக