லேபிள்கள்

8.2.15

C-TET:தேர்வுக்கு ஆன்-லைனில் அனுமதிச்சீட்டு

மத்திய அரசு பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ பாடத்திட்டம்), யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்ட பள்ளிகளிலும்
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித்தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12 வரையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடக்கும்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் (www.ctet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக