தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம்
தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு 10-லிருந்து 12 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவும் 25 பேரின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக