லேபிள்கள்

21.2.15

24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை


குழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப். 24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறைமறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை

அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மறைமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு பணிக்குழுத் தலைவர் அருள்பணி டேவிட் மைக்கேல் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

குழித்துறை மறைமாவட்ட உதயவிழா மற்றும் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் திருநிலைப்பாடுவிழா பிப். 24ஆம் தேதி சித்திரங்கோடு டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.இவ்விழாவில், தமிழகம் மற்றும் பிற மாநில ஆயர்கள் முன்னிலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயராக ஜெரோம்தாஸ் வறுவேலை திருநிலைப்படுத்துகிறார். 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட மக்கள் பங்கேற்கும் பொருட்டு கோட்டாறு மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் (பிப். 24) விடுமுறை வழங்கப்படுகிறது.இதற்கு ஈடாக மார்ச் 7ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள் இயங்கும். இதற்கான அனுமதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக