லேபிள்கள்

21.2.15

பிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் பரமக்குடியில் துவங்கப்படவுள்ள பிற்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் சேர விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு பிற்படுத்தப்பட்டோர்நல கல்லூரி மாணவர் விடுதி துவங்க பிற்படுத்தப் பட்டோர,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இவ்விடுதியில் தங்கி பயில தகுதியுள்ள 100 மாணவர்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.அரசு மற்றும் அரசுஉதவி பெறும் கல்லூரியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும்பிற்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.விடுதி மாணவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் உள்ளிட்டவைஇலவசமாக வழங்கப்படும்.
இவ்விடுதியில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோரிóன் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மாணவர்கள் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையம் குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.தகுதியுள்ளோர் ராமநாதபுரம் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் பரமக்குடி பிற்பட்டோர் நல கல்லூரி விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரமக்குடி பிற்பட்டோர் நல கல்லூரி விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிóக்குமாறும் ஆட்சியர்அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக