தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் TNGTF கிளை துவக்க விழா நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் இன்று (21.2.15) சிறப்பாக நடைபெற்றது.
தோழர் வ.குமரேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு மாநில தணிக்கை குழு உறுப்பினர் தோழர் விநாயக மூர்த்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர்.ஜெயக்குமார், திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் தோழர்.சுப்ரமணி, திருப்பூர் மாவட்ட மகளிர் அணிச் துணைச்செயலாளர் தோழர்.வே.கவிதா, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் தோழர்.மனோகரன். துணைத்தலைவர் தோழர்.விஸ்வநாதன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஓன்றிய செயலாளர் தோழர்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பரமத்தி ஒன்றிய தலைவராக தோழர்.சி.ராஜா, ஒன்றிய செயலாளராக தோழர்.வ.குமரேசன், பொருளாளராக தோழர்.ச.லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் தோழர்.சி.ஜெயா நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக