லேபிள்கள்

6.8.15

10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டது.
இதையடுத்து, வேலைவாய்ப்புக்காக முதல் நாளிலேயே 73,294 மாணவர்கள் இணையவழி மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வருகிற 19-ஆம் தேதி வரை பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு முதல் முறையாக மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்தமதிப்பெண் சான்றிதழ்கள் 90 நாள்களுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.


மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை (ஆக.5) முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளின் மூலம் இணையவழியில் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை புதன்கிழமை பெற்றுச் சென்றனர். அதில் 73 ஆயிரம் பேர் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்காக இணையவழி மூலம் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக