அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் வசதிஇருப்பது குறித்து, கல்வித்துறை அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.பள்ளிக்கு காலையில் வரும் மாணவ, மாணவியர், மாலை வரை எட்டு மணி நேரத்துக்கு மேல் உள்ளனர்.
பல பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காது என்பதால் மாணவ, மாணவியர் வாட்டர் பாட்டில்களில் வீடுகளில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.அதை மதிய உணவு வேளையில் அருந்துகின்றனர். மற்ற நேரங்களில் பள்ளிகளில் உள்ளகுடிநீரை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.சுகாதாரமற்ற, அசுத்தமான குடிநீரை குடிக்கும்போது மாணவ, மாணவியர் உடல் நலம் பாதிக்கிறது; ஊரக பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சில துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பிளாஸ்டிக் குடங்களில் குடிநீர் வைக்கப்படுகிறது. நாளடைவில் மாசுபடும் இக்குடிநீரை குடிப்பது, உடல் நலனுக்கு உகந்ததாக இருப்பதில்லை.
பள்ளிகளில் உள்ள தொட்டிகளில், குடிநீர் சுகாதாரமானதாக உள்ளதா, அடிக்கடி பராமரிக்கப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். கழிப்பிட பராமரிப்பு குறித்தும் கவனிக்க வேண்டும். மாநகர பகுதியில் உள்ள சில அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், குடிநீர் இணைப்பை அதிகரிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காது என்பதால் மாணவ, மாணவியர் வாட்டர் பாட்டில்களில் வீடுகளில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.அதை மதிய உணவு வேளையில் அருந்துகின்றனர். மற்ற நேரங்களில் பள்ளிகளில் உள்ளகுடிநீரை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.சுகாதாரமற்ற, அசுத்தமான குடிநீரை குடிக்கும்போது மாணவ, மாணவியர் உடல் நலம் பாதிக்கிறது; ஊரக பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சில துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பிளாஸ்டிக் குடங்களில் குடிநீர் வைக்கப்படுகிறது. நாளடைவில் மாசுபடும் இக்குடிநீரை குடிப்பது, உடல் நலனுக்கு உகந்ததாக இருப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக