லேபிள்கள்

7.8.15

TRB:அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணை வாபஸ்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் நடைபெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.அதேபோன்று, பள்ளிக் கல்வித் துறையின் 17.11.2014-ஆம் தேதியிட்ட அரசாணையில், போட்டித் தேர்வு மூலம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்படுகிறது. இது தொடர்பான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு இது கட்டுப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக