லேபிள்கள்

5.8.15

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல்மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 


சில தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு, உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட்டது.


தற்போது, அனைத்து தேர்வுமுடிவுகளும் வெளிவந்து, மேல்நிலை மற்றும் தொழிற்கல்விக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.அனைத்து மாணவர்களுக்கும் மறு கூட்டல், மறு மதிப்பீடு, துணைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்துமாணவர்களும் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுத் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக