லேபிள்கள்

16.8.15

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோபோன்றசில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீதமுதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசுஅரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வுமூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்றுநடந்ததுபணி மூப்பு அடிப்படையில் 650க்கும்மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்முதுகலை ஆசிரியர்கள்பங்கேற்றனர். 10 சதவீதம் தவிர்த்து 90 சதவீதகாலியிடங்களை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட கலந்தாய்விலும் பங்கேற்ற40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் தங்களுக்குதகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பதவிஉயர்வை தேர்வு செய்யவில்லை.விருப்பமில்லை என கடிதம் கொடுத்தனர். 'நலத்திட்ட உதவிகளை கொடுப்பது முதல்பிறஆசிரியர்களின் பிரச்னைகளை எதிர்கொள்வதுவரை பல்வேறு சிரமங்களை சந்திப்பதுபணிச்சுமை போன்றவை பதவி உயர்வை தவிர்க்கும்காரணங்களாக உள்ளனஎனகூறுகின்றனர்.

மேலும்,விரும்பிய இடம் கிடைக்காதகாரணத்தாலும் சிலர் பதவி உயர்வைதவிர்த்துள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “முதுகலை ஆசிரியர்தலைமை ஆசிரியர் பணிக்கு ஏறக்குறையஒரே சம்பளம்தலைமை பொறுப்பில் இருப்பதால் பல்வேறுபிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளதுசில பள்ளிகளில்ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்படுகின்றனர்இது போன்றபிரச்னையால் தலைமை ஆசிரியர்களும் சிக்கலுக்குஆளாகின்றனர்.இது போன்ற காரணத்தால் பதவி உயர்விற்கு தகுதிஇருந்தும்,கலந்தாய்வில் பங்கேற்றுவிருப்பமில்லை எனகடிதம் கொடுத்துள்ளோம்,” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக