எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழகம் சார்பில் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கட்டுரை போட்டியை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் நடத்தலாம். இரண்டு போட்டி களிலும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்படும். கட்டுரை போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு மொழிக்கும் தலா 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக 'லேப்டாப்,' ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இரண்டாவது பரிசாக 'டேப்,' ரூ.20 ஆயிரம் ரொக்கம், 3 வது பரிசாக 'டேப்,' ரூ.15 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். ஓவிய போட்டியில் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
விபரங்களுக்கு www.pcra.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக