மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த இணைய வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்த, இணையதள முகவரி மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி
மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிட, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக