'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலணிக்கு தடை
*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்
* தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது
*பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
*தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்
*தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக