லேபிள்கள்

26.2.16

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு , இது தற்காலிக தீர்வே !! நிரந்தர தீர்வு எப்போது ???

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகாலபிரச்னை தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்??


1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. 


அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து,ஓய்வு பெற்ற மற்றும் ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, பிப்.,22ல்அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த ஆசிரியர் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில்தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக