அறிக்கை
***********
இன்று திருச்சியில் நடந்த ஜேக்டோ உயர்மட்டகுழு கூட்டத்தில் ஜேக்டோவில் இடம்பெற்றுள்ள 16 சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
அதில் நமது கூட்டமைப்பு சார்பில்: கடந்த சட்டமன்ற கூட்டத்தில் விதி 110 கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் ஆசிரியர் கோரிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆசிரியர் என்ற வார்த்தை கூட முதல்வர் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
ஜேக்டோவினை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மனம் வேதனையடைந்து உள்ளனர்.
பங்களிப்பு ஒய்வூதியத்திட்டத்திற்கு வல்லுனர் குழு அமைப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பது ஆசிரியர்களை மேலும் வேதனை அடையச்செய்துள்ளது.
எனவே லட்சக்கணக்கான ஆசிரியர்களின் மனவெளிப்பாடக நாளை முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதே கருத்தினை ஆதரித்து தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் பேசும் போதும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தினை உடனே அறிவிக்க வலியுறுத்தினர்.
ஆனால் பிற 12 சஙக பிரதிநிதிகள் SSLC மற்றும் HSC தேர்வு நெருங்கி விட்டது. தேர்தல் பணி ஆரம்பிக்க உள்ளது . ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் . எனவே போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தினர்.
எனவே கலந்து கொண்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகளில் 16 பேரில் பெரும்பான்மையானோர் போராட்டத்தினை தற்காலிக நிறுத்த கருத்துக்களை பதிவு செய்தமையால் ஜேக்டோ போராட்டத்தினை தற்காலிகமாக புதிய அரசு அமையும் வரை நிறுத்த முடிவு செய்துவிட்டது. என்பதை மிகுந்த மனவேதனையுடனும், ஜாக்டோ தலைவர்கள் ஆசிரியர்கள் உணர்வினை புரிந்து கொள்ளவில்லை எனபதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
- இவன், மாநில அமைப்பு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக