பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும், மதிப்பீட்டு முகாமுக்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த, 4ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 14ம் தேதி முதல் முக்கியப்பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கவுள்ளன.
இந்நிலையில், 14ம் தேதி முதல் மதிப்பீட்டு பணிகளை துவக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கோவை மாவட்டத்தில், ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி மற்றும் சி.ஆர்.ஆர். பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக, தமிழ் பாடத்துக்கான விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலில் இருந்து சேகரிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.மேலும், விடைத்தாள் முகாம்களில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியல் இறுதிசெய்யும் பணிகள் தற்போது கோவையில் நடந்துவருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக