பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து,
மாணவர்களுக்கு கற்பிக்ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'மேப்'பில், முதல்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி, அரசு அலுவலகங்களில், முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டு வரும் நிலையில், வகுப்பறை மேப், புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட ஸ்டிக்கரை என்ன செய்வது என, தெரியாமல், ஆசிரியர்கள் குழம்பி போய் உள்ளனர்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், ''தேர்தல் நன்னடத்தை விதி, அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.
ஆகவே, வகுப்பறையில் தொங்கும் மேப்பிலும்,முதல்வரின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும்.''ஏன் என்ற கேள்வி, மாணவ, மாணவியர் மத்தியில் எழும். அப்போது, ஆசிரியர்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கற்பிக்கலாம். வகுப்பறைகளில் இத்தகைய மலிவான விளம்பரம் தேடுவதை, இனியாவது அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக