'தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத்தேர்வுக்கு, மார்ச், 14 முதல்
விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள் உருவாக்கப்பட்டன. இதில், ஒன்பது மத்திய பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர வேண்டுமெனில், 'க்யூசெட்' என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை, ராஜஸ்தான் மத்திய பல்கலை நடத்துகிறது. இதற்கு, 'மார்ச், 14 முதல் ஏப்ரல், 15 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது; மே, 21, 22ல் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை உட்பட நாடு முழுவதும்உள்ள, ஒன்பது பல்கலைகளின் பாடப்பிரிவுகளில் சேர முடியும்.தமிழ்நாடு மத்திய பல்கலையிலும், அதன் இணைப்பில் செயல்படும், 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்லுாரி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆகியவற்றிலும் சேர முடியும்.
இதில், சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்லுாரியில், பிளஸ் 2 முடித்து, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பொருளாதார படிப்பு முடித்தால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல லகரங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மத்திய நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் பலர் எழுதாததால், வட மாநில மாணவர்களே தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னைக்கு வந்து குறைந்த செலவில் பொருளாதாரம் படித்து, அதிக வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.எனவே இந்த முறையாவது, தமிழக மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி, கோட்டூர்புரத்திலுள்ள, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்லுாரியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக