லேபிள்கள்

15.4.16

வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

 ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.சி. சாலை நடுநிலைப் பள்ளி, காவிரி சாலை நடுநிலைப் பள்ளி, காளைமாடு சிலை ஆசிரியர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி, ஓடக்காட்டுவலசு மேல்நிலைப் பள்ளி, ஜவுளி நகர் நடுநிலைப் பள்ளி, பி.பி.அக்ரஹாரம் நடுநிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர்  மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம்  மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஆசிரியர் காலனி நடுநிலைப் பள்ளி ஆகிய 10 மாநகராட்சிப் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.


 இதற்கான பணிகளை கோவை  பியூச்சர் எரா என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. ரயில்வே காலனி மற்றும் கருங்கல்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலா 2 வகுப்புகளும், பிற பள்ளிகளில் தலா ஒரு வகுப்பும் என மொத்தம் ரூ. 24 கோடியில் 12 வகுப்புகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

 ஈரோடு எஸ்.கே.சி.சாலை மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தயார் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. அதைத் தொடர்ந்து, பியூச்சர் எரா நிறுவன பங்குதாரர் அரவிந்த் தலைமையில் ஸ்மார்ட் வகுப்புகளில் பொருத்தப்பட்டு உள்ள ஸ்மார்ட் பலகைகளை இயக்கி பாடம் நடத்தும் முறை குறித்து ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக