பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது.
பயிற்சிக்கு பெயர் பட்டியல் அனுப்பிய, பல தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காததால், பல பணியாளர்கள் பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை.பொதுத்தேர்வு பணியினை காரணம் காட்டி, தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளித்திருந்தனர். ஆனால், பயிற்சிக்கு தாமதமாக வந்த பணியாளர்களுக்கு, அந்தந்த தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், கல்வியாண்டு துவங்கும் போது, சம்பந்தப்பட்ட பணியாளர்களை உரிய நேரத்தில் விடுவிக்காமல், இழுத்தடித்த தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக