லேபிள்கள்

14.4.16

CPS -விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்.

புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல
கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசுசெலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தலுக்குமுன் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் இறந்த ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு, அவர்கள் செலுத்திய சந்தா தொகை, வட்டி, இதர பணப்பலன்களை வழங்க அரசு உத்தரவிட்டது.ஆனால் பாதிக்கப்பட்டோர் அனுப்பிய விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் கூறி கருவூல கணக்குத்துறை திருப்பிஅனுப்பி வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பங்களை அரசின் புள்ளி விபர தொகுதி மையத்திற்கு அனுப்பினால் போதும். அங்கிருந்து கருவூல கணக்குத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரே மாதத்தில் பணப்பலன் கிடைக்கும் என, அரசு தெரிவித்தது. தற்போது விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரித்து வருகிறது.மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் பணப்பலன் தர முடியாது. சீனியாரிட்டி படி தான் தரமுடியும் எனவும் கூறியுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக