அகில இந்திய மருத் துவ கவுன்சில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளுக்காக பொது நுழைவுத்தேர்வை நடத்தலாம் என்று பரிந்துரை செய்து 2011-ம் ஆண்டில் அறிவிக்கை வெளியிட்டது.
வழக்கு
இதனை எதிர்த்துசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு, வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (சி.எம்.சி.) உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி பொது நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
பொது நுழைவுத்தேர்வை பரிந்துரைக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முகாந்திரம் இல்லை என்றும், இந்த முடிவு சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.
திரும்பப்பெற்றது
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை சீராய்வு மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் ஆர்.பானுமதி ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றது. பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்தது.
தீர்ப்பு விவரம்
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நன்றாக பரிசீலித்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதற்கான காரணங் களை நாங்கள் தற்போது விரிவாக கூற விரும்பவில்லை.
முந்தைய தீர்ப்புகளை அந்த தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை. தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு, 3 நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அறிகிறோம்.
ஆகவே, அந்த தீர்ப்பை திரும்பப்பெறுகிறோம். இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க உத்தரவிடுகிறோம். புதிதாக விசாரித்து முடிக்கும் வரை, பொது நுழைவுத்தேர்வை நடத்தலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
தேர்வு நடத்தலாம்
சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு திரும்பப்பெறப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரித்து முடிக்கப்படும் வரை, இந்திய மருத்துவ கவுன்சில், பொது நுழைவுத்தேர்வுகளை நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக