மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்விநிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறதகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.இப்போது 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக