லேபிள்கள்

12.4.16

ஆசிரியர்களை கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம் !

வாயிற் கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்களது ஆதரவு நிலையை தெரிவிக்க வாய்ப்புள்ளதால் 10 ம் வகுப்பு விடைத்தாள்
திருத்தும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.

        பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 15 ல் துவங்குகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டங்கள் 
நடத்துவது வழக்கம். தற்போது வெளியிடப்பட்ட தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 9 மாதங்கள் மகப்பேறு விடுப்பு, 54 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படும், பழைய பென்ஷன் திட்டம், 25 ஆண்டு பணிபுரிந்தோருக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட பல சலுகைகள் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சில 'வாட்ஸ் ஆப்' குரூப், இணையதளங்களில் தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.
           அதேபோல் விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் வாயிற் கூட்டங்கள் நடத்தினால் தங்கள் ஆதரவு குறித்து சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக பேச வாய்ப்புள்ளது. தேர்தல் விதிமீறலை தடுக்க விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும் பள்ளிகளில் பிரசாரம் செய்ய தடை உள்ளது. இதனால் விதிமீறல் குறித்து கண்காணிப்பது எங்களது கடமை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக