லேபிள்கள்

3.5.16

மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்

சென்னை;''வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் அச்சிடும் பணி முடிந்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும், மே 5ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,

வீடு வீடாகச் சென்று வழங்குவர்.

வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், விரைவு தபால் மூலம் பெற விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களில், இரண்டு கோடி பேரின் மொபைல் போன் எண், தேர்தல் கமிஷனிடம் உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் வரிசை எண், பாகம் எண், ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விவரம், இன்று முதல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக