லேபிள்கள்

7.5.16

தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்

புது தில்லி:தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ
கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு  இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது.
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான  வழக்கு இன்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் விகாசிங் தனது விளக்கத்தை எடுத்துரைத்தார்.அதில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது.  அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார்.மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்கில் தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மாநில அரசுகள் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உச்சசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.நுழைவுத்தேர்வு வழக்கு விசாரனை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக