நாமக்கல் பகுதியில் செயல்படும் சில பண்ணை பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அட்மிஷன் தொடங்கி விட்டது. அதேபோல் தனியார் மெட்ரிக்
பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர் பலர் வந்தவண்ணம் உள்ளனர். அதேபோல் சில தனியார் கல்லூரிகளிலும் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு தொடங்கி விட்டது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கு நெருக்கமான கல்வி அதிபர்கள் வசம் அதிமுகவினரும் பணத்தை ஒப்படைத்து வைத்துள்ளனர். மே 16ம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாக பணத்தை பெற்று பட்டுவாடா செய்யும் திட்டமும் உள்ளதாம். தேர்தல் கமிஷன் நம்மளை என்ன செய்யப்போகிறது என அசால்டாக அட்மிஷன் தொடங்கியவர்களுக்கு ஊத்தங்கரை ரெய்டு சம்பவம் சிக்னல் கொடுத்து விட்டது. இதனால்ஆளும்கட்சி விஐபிக்கள் கொடுத்து வைத்த பணத்தை மறைக்க முடியாமல் அந்த கல்லூரி அதிபர்களும் திண்டாடி வருகின்றனர். கல்லூரியில் வைத்திருந்தால் சிக்கல் என்பதால் தங்களுக்கு நெருக்கமான ஊழியர்கள் வீட்டுக்கு கொடுத்தனுப்பி பத்திரமாக பாதுகாக்கின்றனர்.
சில கல்லூரிகளில் வசூலிக்கும் நன்கொடைக்கு ரசீது கொடுப்பதில்லை. இது தெரிந்தால் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்து விடுவர். அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கலாகிவிடும் என்பதால் டோக்கன் பேமண்ட் மட்டும் வாங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக