யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம்நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு
நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.யு.ஜி.சி., கடிதம்கடந்த ஆண்டு, நவம்பரில், கல்வி மைய வளாகத்துக்கு வெளியே செயல்படும், மையங்களை மூடிவிடுமாறு, 10 கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., கடிதம் எழுதியது. இந்த நிறுவனங்கள், விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு எதிராக, பிட்ஸ் கல்வி மையம், கோர்ட்டில், இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது.மத்திய அரசின் நிர்வாக உத்தரவு மூலம், நிகர்நிலை பல்கலையை உருவாக்குவதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 123 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைகள் விஷயத்தில், யு.ஜி.சி., அத்துமீறி நடப்பதாக,மத்திய அரசு கருதுகிறது. இது பற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுகளால், அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.அந்த குழப்பங்களை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது' என, தெரிவித்தார்.
மற்றொரு மூத்த அதிகாரி கூறியதாவது:
நிகர்நிலை பல்கலைகள் மீதான புகார்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. 2014ல், 268 புகார்கள் கூறப்பட்டன. 2015ல், புகார்களின் எண்ணிக்கை, 112 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்தில், உயர்கல்வித்துறை செயலர், யு.ஜி.சி., நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில்,விவாதிக்கப்பட்ட பிரச்னை குறித்து ஆராய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அக்குழு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். நிகர்நிலை பல்கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டும். கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும்,சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சிறப்பான கல்வி அளிக்கும் நிறுவனங்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். யு.ஜி.சி.,க்குள்ள அதிகாரங்களை, என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தர அங்கீகார கவுன்சில், மறுபரிசீலனை செய்யலாம். கல்விநிறுவனங்களின் தரத்தை, வெகு காலமாக ஆராய்ந்து, அவற்றுக்கு தரச்சான்றுகளை, என்.ஏ.ஏ.சி., வழங்கி வருகிறது.பரிசீலனையு.ஜி.சி., ஆய்வுக்கான நிபுணர்களை தேர்வு செய்யும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, யு.ஜி.சி.,யின்நடவடிக்கைகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது, தவறான தகவல்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு மூத்த அரசு அதிகாரி கூறினார்.
அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிகர்நிலை பல்கலைகளின் நிதிக் குழுக்களில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவோரின் பெயர்களை அளிக்குமாறு, ஏற்கனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைகளின் மேலாண்மை குழுக்களுக்கு, யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளை அனுப்பும்போதும், அதேபோன்ற முறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானி உறுதி
நாடு முழுவதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,யு.ஜி.சி.,யின் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், கடந்த மார்ச்சில் புகார் தெரிவித்துள்ளன. அவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ஸ்மிருதி இரானிஉறுதியளித்துள்ளார்.இது குறித்து, இந்திய கல்வி மேம்பாட்டு சமூகம் என்ற அமைப்பின் தலைவர், ஹரிவன்ஷ் சதுர்வேதி கூறுகையில், ''யு.ஜி.சி., போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான வகையில் செயலாற்றஉதவுபவையாக இருக்க வேண்டும். பல்கலையுடன் இணைப்பு பெற்றகல்லுாரிகள் சிறப்பான வகையில் செயல்பட்டால், அவற்றிற்குதன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,'' என, தெரிவித்தார்.
விதிமுறை என்ன?
கடந்த, 2010ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிகர்நிலை பல்கலைகளின் செயல்பாட்டை, யு.ஜி.சி., எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம்; பல்கலைகளில் அளிக்கப்படும் வசதி வாய்ப்புகளை, மதிப்பீடு செய்யலாம். நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, நிகர்நிலை பல்கலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை, யு.ஜி.சி., உறுதி செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக