தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்வி தொடர்பான, பி.எட்., -- பி.பி.எட்., -- எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கை நடத்த, இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், அனைத்து தனியார் கல்லுாரிகளும், செப்., 23க்குள், மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்து அங்கீகாரம் பெறும்படி, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக