ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,
http:/mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை,
nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம்.
புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது. இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது.'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக