உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக