*அன்பான தோழர்களே*
_வணக்கம்_
தமிழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னெடுப்பில் பல்வேறு பள்ளி முதல்
பல்கலைக்கழக வரையிலான ஆசிரிய சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், சமுதாய இயக்கங்கள் உள்ளிட்டவையோடு கல்வி செயல்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து *கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு* என்ற ஒன்றை உருவாக்கி மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை 2016 – சில உள்ளீடுகள் என்பதில் பொதிந்துள்ள அபாயங்களை உணர்ந்தும் சமுகத்தின் தலையாய கடமையாகவும் உணர்ந்து அவற்றை எதிர்த்து பல்வேறு இயக்கங்களை திட்டமிட்டுள்ளது.
அதன் முதல் பகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான குழுக்களையும் அமைத்துள்ளன.
எல்லா மாவட்ட குழுக்களும் புதிய கல்வி கொள்கை 2016- சில உள்ளீடுகளில் உள்ள அபாயங்களை விளக்கி மாவட்ட அளவிலான கருத்தரங்குகளை எதிர்வரும் *செப்டம்பர் 17, 18 அல்லது 24, 25 ஆகிய நாட்களில் நடத்தவும் பணித்துள்ளது. நாமும் நமது மாவட்டங்களில் நடக்கவிருக்கும் மாவட்ட அளவிலான கருத்தரங்களில் பங்கற்போம்*
வெறும் அபாயங்களை மட்டுமே சொல்லி நிற்காமல், அதற்கான மாற்று ஒன்றினை தருவது ஆக்கப்பூர்வமான செயல் என்று உணர்ந்து கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு *மாற்று கல்வி கொள்கை*” ஒன்றினை தயார் செய்யும் பணியில் தலைப்பட்டுள்ளனர்.
_*இந்த மாற்று கல்வி கொள்கை உருவாக்கத்திற்கான வரைவு குழு தலைவராக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி அவர்கள், உறுப்பினர் செயலராக ஆயிஷா இரா.நடராஜன் அவர்களும், உறுப்பினர்களாக திருமிகு பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேரா. பொன்ராஜ், பேரா.பாலகிருஷ்ணன், பேரா.ஒடியன், பேரா. முருகேசன், இந்திய மாணவர் சங்கத்தின் உச்சிமாகாளி, மற்றும் ஆய்வுப்பட்ட மாணவி தீபா உள்ளிட்டோர் செயல்படுகின்றனர*்_
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் *அக்டோபர் 8 (சனி) அன்று சென்னையில்* தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்கும் *மாநாடு* ஒன்றினை சென்னையில் திட்டமிட்டுள்ளது. அம்மாநாட்டில் *மாற்று கல்வி கொள்கை*யும் வெளியிடப்பட உள்ளnது.
நாம் இன்று முதல் தொடர்ந்து அக்டோபர் 7 வரை நமது ஆசிரியர் நண்பர்களை வலியுறுத்தி மிகப் பெரிதான எண்ணிக்கையில் அம்மாநாட்டில் பங்கேற்கச் செய்து நாமும் சிறப்புறுவோம்!! நன்றி.
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
_மாநில மையம்_

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக