லேபிள்கள்

15.10.16

10 நாள் கூடுதல் வகுப்பு : பள்ளி மாணவர்கள் நிம்மதி

உள்ளாட்சி தேர்தல் ரத்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10 நாட்கள் கூடுதல் வகுப்பு கிடைத்துள்ளது, அவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. 

ஆசிரியர்கள் கவலை : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் பணி என, ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் மாற்றுப்பணி வழங்கப்பட்டது. அக்., முதல், டிசம்பர் வரை, பல பண்டிகை விடுமுறைகள் உள்ள நிலையில், தேர்தல் பணிக்கு, 10 நாட்கள் ஒதுக்கப்பட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை அடைந்தனர்.உள்ளாட்சி தேர்தல் ரத்தானதால், தேர்தல் பணி வகுப்புகள் ரத்தாகி விட்டன; ஆசிரியர்களும், மாணவர்களும் நிம்மதியடைந்து உள்ளனர். இருப்பினும், மீண்டும் தேர்தல் அறிவித்தால், பாடங்கள் நடத்துவது தடைபடுமோ என்ற, குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், தியாகராஜன் கூறியதாவது: 

தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வழக்கமான வகுப்புகளுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உட்பட, வேறு எந்த பணிகளும் கிடையாது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், தேர்தல் பணி, வாக்காளர் கணக்கெடுப்பு என, பல வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால், 50 நாட்கள் வரை வீணாகிறது.

வேறு பணிகள் : எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணி தவிர, வேறு பணிகள் வழங்கக் கூடாது. இதை கல்வித் துறை கடைபிடித்தால், பொதுத்தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களும் மதிப்பெண் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக