பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.
இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக