காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும்,
காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன.
தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது; அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளின் காலாண்டு தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற்று வருகின்றனர்.
பாட வாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பின்தங்கிய பள்ளி மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட உள்ளது. 'வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக