கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித் தேர்வு முடிவு, இரு நாட்களில் வெளியாக உள்ளது. கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேரவும், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், முழுநேர இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், பல்கலை மானியக் குழுவின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், ஜூலையில் நடத்தப்பட்ட இத்தேர்வில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து மூன்று மாதங்களாகின்றன; இரண்டு நாட்களில், தேர்வு முடிவு வெளியாக உள்ளது. ஜனவரியில் நடக்க உள்ள, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கும். ஜூலை தேர்வில் தேர்ச்சி பெறாதோர், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக