அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதில், 50 சதவீதத்திற்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியலை, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் தயாரித்துள்ளன. அவர்களுக்கு, டி.சி., எனப்படும், மாற்று சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், 'டல்' மாணவர்களை, பள்ளிகள் கட்டாயமாக வெளியேற்றுகின்றன.
அந்த மாணவர்கள், மற்ற பள்ளிகளிலும் சேர முடிவதில்லை. எனவே, இந்த பிரச்னைக்கு, பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழி என்ன : பள்ளிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், மாணவர்கள், உடனே தங்கள் பெற்றோருடன் சென்று, பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி செயலர் அலுவலகம்; நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம்; சைாதாப்பேட்டை, பனகல் மாளிகையிலுள்ள, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்.மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், புகார் மனு அளிக்கலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக