லேபிள்கள்

25.4.17

டி.இ.டி., தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.


தமிழகத்தில் ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுக்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் பரிசீலனையில், பலரது புகைப்படம் இல்லாதது, ஓ.எம்.ஆர்., தாளில் கையெழுத்து இல்லாததும் தெரிய
வந்துள்ளது. மேலும் விண்ணப்பம் ஒப்படைக்கும்போது பலரது ஓ.எம்.ஆர்., சீட்டுகள் மடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை கணினி மூலம் மதிப்பீடு செய்ய முடியாது என்பதால் அவை அனைத்தும், 'டேமேஜ்'ஆக கணக்கிட்டு மாற்று 'சீட்' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 
தேர்வர்கள் பலர் அஜாக்கிரதையாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. விண்ணப்பமே சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும்,100க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற தவறுகள் செய்துஉள்ளனர். மாவட்ட அளவில் நடந்த நோடல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ஹால் டிக்கெட்'டில், தேர்வரின் புகைப்படம் இல்லை என்றால், இணைய
தளத்தில் உள்ள அதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஓ.எம்,ஆர்., ஷீட்டில் கையெழுத்து இல்லாத தேர்வர்களின் விண்ணப்பத்தில், பிறபக்கங்களில் உள்ள கையெழுத்தை 'ஸ்கேன்' செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு 
செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக