தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனவரி, ௧ம் தேதி முதல், அகவிலைப் படியை, 4 சதவீதம் உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: மத்திய அரசு அலுவலர்களுக்கு, 2017 ஜன., 1 முதல், அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி, ஜன., 1 முதல், நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு, 244 முதல், 3,080 ரூபாய் வரை, ஊதிய உயர்வு; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 122 முதல், 1,540 ரூபாய் வரை, ஓய்வூதிய உயர்வு கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு, அகவிலைப்படி உயர்வு நிலுவையாக, மே மாதம் சம்பளத்துடன் வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு, 987 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக