லேபிள்கள்

25.4.17

'டெட்' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மூன்றாண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 29, 30ம் தேதிகளில், இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடக்கிறது; 7.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'டெட்' தேர்வுக்கு, மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் இடம்பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் இடம் பெற்ற, 3,000 பறக்கும் படைகள், 1,900 நிலையான படைகளையும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. தேர்வில் முறைகேட்டுக்கு இடம் அளிக்கக்கூடாது. காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நடக்கும் வரை, வினாத்தாள்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக