லேபிள்கள்

12.11.17

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான,

டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவியில், 1,065 இடங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 23 முதல், 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. 
இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, நிர்மலா மேல்நிலை பள்ளி மற்றும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வரும், 24, 25ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.இன்ஜினியரிங் பாடங்களுக்கு, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், வரும், 23 முதல், 25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக