லேபிள்கள்

17.11.17

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட், ஆதார் கட்டாயம்

உத்தர பிரதேச மாநிலத்தில், பள்ளி பொதுத் தேர்வு எழுத வரும் 
மாணவர்களுக்கு, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுடன், ஆதார் அட்டையும்
 கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
 பா.ஜ., ஆட்சி நடக்கிறது.பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு, மாணவர்கள்
 விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் 
என்றும், ஆதார் எண் குறிப்பிடாத மாணவர்களின் விண்ணப்பங்கள் 
நிராகரிக்கப்படும், என்றும், மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தங்கள் 
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுடன், ஆதார் அட்டையையும் கட்டாயம் எடுத்து
 வர வேண்டும் என, மாநில தலைமை செயலர் சஞ்சய் அகர்வால் 
அறிவுறுத்தி உள்ளார்.வரும், 2018, பிப்., 6 முதல், பொதுத் தேர்வுகள் துவங்க 
உள்ளன. இதற்கான மையங்களை ஆன்லைனில் நிர்ணயிப்பது குறித்து, 
மாநில தலைமை செயலர் சஞ்சய் அகர்வால், கல்வி அதிகாரிகளுடன், '
வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தியபோது
கூறியதாவது:
தேர்வு எழுத வரும் மாணவ - மாணவியர், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுடன்
, ஆதார் அட்டையையும் கட்டாயம் எடுத்து வர வேண்டும்; ஆதார் அட்டை 
இல்லை என்றால், தேர்வு எழுத அனுமதி வழங்கக்கூடாது. இதற்கு பள்ளி
 முதல்வர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர்
கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக