லேபிள்கள்

20.12.17

10ம் வகுப்பு தனித்தேர்வு: 22 முதல் விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும், 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது. இதில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வில், பள்ளிகளில் மாணவராக இல்லாமல், நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 22 முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வுத்துறைக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க சேவை மையங்களை அணுக வேண்டும். சேவை மைய விபரங்கள் www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான நிபந்தனைகளையும், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக